துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை வாங்க அவர்களின் உறவினர்கள் மறுத்து வருவதால், அவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 12 அப்பாவி பொதுமக்கள்  போலீ சாரின் மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். அவர்களது உடல்கள் இன்று பிரேத பரிசோதனை நடைபெற்றது.

போலீசார் போராட்டக்கார்களின்  தலை, நெஞ்சை குறிவைத்து சுட்டதாகவும்,  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இறந்தவர்களின் உடல்களை  தனியார் மருத்துவர்களை கொண்டு உடற்கூறு நடத்தவும் வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை  நீதிபதிகள் வேல்முருகன், ரவீந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர், 12 பேரின் உடல்கள் உடற்கூறு 4 மாஜிஸ்திரேட் முன் நடைபெறுவதாக  அரசு வக்கீல் வாதம் செய்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உடற்கூறு ஆய்வு செய்தாலும் சரி செய்யாவிட்டாலும சரி உடல்களை பதப்படுத்த வேண்டும் என்றும், நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அரசியல் ரீதியில் வாதிட வேண்டாம் என அரசு வக்கீலுக்கு கண்டனம் தெரிவித்த  நீதிபதிகள் தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்று தங்களுக்கு தெரிய வேண்டும் என்றும்   அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கறிஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,  பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து வழக்கின்  விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.