உச்சநீதிமன்ற செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்க்க வேண்டும்…..காங்கிரஸ்

டில்லி:

‘‘கொலீஜியத்தின் பரிந்துரைகளை தடுக்கும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மூத்த நீதிபதிகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்’’ என காங்கிரஸ் கூறியுள்ளது.

நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதை எதிர்க்காவிட்டால் வரலாறு மன்னிக்காது என மூத்த நீதிபதி குரியன் ஜோசஃப் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்

இது குறித்து டில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ உயர்நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதி நியமினத்தில் வெளித்தலையீடுகளை அனுமதிக்கக் கூடாது.

கொலீஜியம் பரிந்துரையை தடுக்க ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றால் தலைமை நீதிபதியும், மூத்த நீதிபதிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

You may have missed