கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100% சொத்து வரியை உயர்த்தியதை எதிர்த்து 3000 தொழிற்கூடங்களை மூடி போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்தின் தொழில் நகரம் எனக் கூறப்படும் கோவை நகரில் ஏராளமான தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன.   மோட்டார் பம்ப் செட், வாகன உதிரிப் பாகங்கள்,  ஜவுளித்துறை இயந்திரங்கள், அவற்றுக்கான உதிரிப்பாகங்கள் என பல வகையான தொழிற்கூடங்கள் இங்கு இயங்கி வருகின்றன.    மொத்தத்தில் இந்த நகரில் நடைபெறாத தொழிலே இல்லை எனக் கூறலாம்.

சமீபத்தில் கோவை மாநகராட்சி நகரில் உள்ள அனைத்து தொழிற்கூடங்களுக்கும் சொத்து வரியை 100% அதிகரித்து உத்தரவிட்டது.    திடீரென 2 மடங்கு சொத்து வரி அதிகரிக்கப்பட்டதால்  தொழிலதிபர்கள் கடும் துயரில் ஆழ்ந்தனர்.

ஏற்கனவே பொருளாதார முடக்கத்தால் தொழில்கள் முடங்கியுள்ளதால் தொழில்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர்கள் முறையிட்டுள்ளனர்.    ஆனால் கோவை மாநகராட்சி இவர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

இதையொட்டி கோவை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 3000 தொழிற்கூடங்கள் மூடப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.   இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி வரை வர்த்தகம்  பாதிக்கப்பட்டுள்ளது.