ஒற்றுமையாக இருக்க பன்னீர்செல்வத்துடன் பேசுவோம்!! தம்பிதுரை பேட்டி

சென்னை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று இரண்டாவது முறையாக சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.திமு.க.வில் பிளவும் இல்லை, அணிகளும் இல்லை. தற்காலிகமாகத் தான் இரட்டை இலை முடகப்பட்டுள்ளது. இது நிரந்தரம் அல்ல. வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை நடந்திட பாடுபடவேண்டும். முதல்வரை தொகுதி பிரச்சினை தொடர்பாக சந்தித்தேன். ஆட்சியை தொடர்ந்திட எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய இந்த கட்சி ஒன்றுமையாக இருக்க வேண்டும்.

அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்தை வரவேற்கிறேன். ஒற்றுமையாக இருக்க ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவரும் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றவர் தான். நானும் இரட்டைஇலையில் நின்று வெற்றிபெற்றவன் தான். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.