சென்னை:

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 2000 கடைகளையும் அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம், குறைவான எண்ணிக்கை கொண்ட கடைகளை புதிய உரிமத்துடன் வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

மெரினா கடற்கரையை சுத்தமாக வைக்க வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கும், ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து;ம,  மீனவர் நலன் தொடர்பான முராரி குழு அறிக்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும் மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கும், சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி கள்  வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின்போது உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க மீனவர்களும் உதவி செய்யவேண்டும், மெரினா கடற் கரையை சுத்தமாக வைக்க மாநகராட்சி ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையர்கள் கடற்கரையில் காலை யில் நடைபயிற்சி மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இநத் நிலையில் வாக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், தற்போது மெரினா கடற்கரையில் சுமார் 2ஆயிரம் கடைகள் உள்ளதாகவும், கடலோர ஒழுங்கு முறை சட்டத்திற்கு உட்பட்டு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரையில்  உணவகங்கள், மின் விளக்குகள், சைக்கிள் பாதைகள், சைக்கிள் நிறுத்து மிடங்கள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாநகராட்சி திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த திட்டத்தினால், கடல்  ஆமைகள், மீன்கள் பாதிக்கப்படாதவாறு அறிவியல் ரீதியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், கடற்கரையில் உள்ள மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்த நீதி மன்றம் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஆணையர்,  மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருவதாகவும் 3 முதல் 4 மாதங்களில் மாற்று இடங்களுக்கு மீனவர்களின் கடைகள் மாற்றப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  மெரினா கடற்கரையில்  உள்ள 2000 கடைகளையும்  அப்புறப் படுத்தி விட்டு, புதிய உரிமத்துடன் குறைவான கடைகளுக்கு அனுமதி வழங்க மாநகராட்சிக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மெரினாவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு அறிக்கையை பிப்ரவரி 1 ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் அடுத்தக்ககட்ட விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்