அரசியல் பிரவேசமா? லாரன்ஸ் என்ன சொல்கிறார்..

டிகர் ராகவா லாரன்ஸ் படங்களில் நடிப்பது. இயக்குவது, நடன மாஸ்டராக இருப்பது என பிஸியாக இருக்கிறார். அதே சமயம் சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். லாரன்ஸ் அரசியலுக்கு வர முயற்சிப்பதாக அவர் மீது விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அரசியல் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
அதில், ’ஒருவர் அரசியலில் நுழைந்து மக்களுக்கு சேவை செய்ய ஒரு நிலையைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவர் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள மெசேஜில் கூறியிருப்பதாவது:
அரசியல்- நான் ஒரு பதவியைப் பெறுவதற்காக அரசியலுக்கு வருவேன், ஏழைகளுக்கு இதைச் செய்வேன் என்று உறுதியளிப்பது. நேரத்தை வீணடிப்பதாகும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக இருந்து சமூகத்திற்காக சேவை செய்யுங்கள். எனது 12 வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்றாக எனது வீடியோக்கள் உள்ளன. பலரது கனவுகள் நனவாகியிருப்பதை நீங்கள் காணலாம். மொத்தம் 200 குழந்தைகள் படிக்க வைக்கிறேன். அரசியலில் நுழையாமல் இதைச் செய்ய முடியும். சேவைதான் கடவுள்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.