என்னை வரவிடாமல் தடுக்க கோவில்கள் பாஜகவின் சொத்தா ? :  ராகுல் கேள்வி

--

ந்தூர், மத்திய பிரதேசம்

ன்னை அனுமதிக்காமல் இருக்க கோவில்கள் பாஜகவின் சொத்தா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்க உள்ளன.   வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 11  ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    அதை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோவில்களுக்கு சென்று வருகிறார்.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது தேர்தல் பிரசாரத்தின் இடையில் உஜ்ஜையினி நகரில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தார்.

இதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.     பாஜக பிரமுகர் பாத்ரா தமது தேர்தல் பிரசாரத்தில், “தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் இந்துக்களின் வாக்குகளை கவர பல விதத்தில் முயன்று வருகின்றனர்.    ராகுல் காந்தியின் இந்துயிச மாறுவேடத்தில் இதுவும் ஒன்றாகும்.  அவர் இந்துக்களை ஏமாற்ற பூணூல் அணிந்துக் கொண்டுள்ளார்.   பூணூல் அணிந்த அவர் எந்த கோத்திரத்தை சேர்ந்தவர் என ஏன் சொல்லிக் கொள்வதில்லை?” என கேட்டிருந்தார்

இவ்வாறு ராகுல் காந்தியின் இந்துயிச மாறுவேடம் என பாஜக விமர்சனம் செய்யும் போதும் பிரதமர் மோடியும்  அமித் ஷாவும் இது குறித்து ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளனர்.

ராகுல் இன்று, “என்னை கோவிலுக்கு செல்லக்கூடாது என அனுமதி மறுக்க கோவில்கள் பாஜகவின் சொத்துக்களா? நான் விரும்பும் எந்தக் கோவிலுக்கும் செல்வேன்.  அதற்கு எனக்கு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை.   நான் ஒரு தேசிய தலைவர்.  இந்து வாதி அல்ல” என கூறி உள்ளார்.