ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநில எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

கடந்த சில மாதங்களாக காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையே கடும் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதையொட்டி அங்கு பதட்டமான சூழல் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு புல்வாமா தாக்குதலை நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது முதல் பதட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ மத்திய அரசு செய்து செய்து காஷ்மீர் மாநிலத்தை  3 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மசோதா நிறைவேற்றப்பட்டது. வரும் அக்டோபர் 31ம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது.  அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் ஆகியவை முடக்கப்பட்டன.   முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்தற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.   அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அத்துடன் தீவிரவாத ஊடுருவல்களும் தாக்குதல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

ஆகவே காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளின் நான்கு முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

சோபியான் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் இருவர் மரணமடைந்தனர். இவ்வாறு பதட்டமான சூழல் நீடித்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.