மனைவி வெளிநாடு செல்வதை தடுக்க, ‘வெடிகுண்டுடன் பெண்’ பயணம் என மிரட்டல் விடுத்த கணவர்!

சென்னை:

னைவி வெளிநாடு செல்வதை தடுக்க நினைத்த நபர் ஒருவர்,  விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.  அப்போது, வெடிகுண்டுடன் தற்கொலைப் பெண் ஒருவர் விமானத்தில் பயணம் செய்வதாக கூறினார். இது தொடர்பான விசாரணையில், அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 8ந்தேதி அன்று டில்லி விமான நிலையத்திற்கு மர்ம நபரிடம் இருந்து தொடர்ந்து போன் கால்கள் வந்தன. போனில் பேசிய நபர், ஷாமினா என்ற ரஃபியா என்ற தற்கொலைப்படையைச் சேர்ந்த பெண், சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபாய் அல்லது சவுதி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய உள்ளார் என்று மிரட்டி இருந்தார்.

இதையடுத்து, விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. மேலும் போனில் பேசிய நபர் குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நிலையில், விமான நிலையத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் டில்லி அருகே உள்ள பாவானா பகுதியில் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் நசிருதீன் என்பதும், இவர் ஷாமினாவின் கணவர் என்பதும் தெரிய வந்தது. ஷாமினாவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால், அவர் நாட்டை விட்டு வெளியேற விரும்பினார். இருப்பினும், அவளைத் தடுக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து,  அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையிலேயே, அவர் தற்கொலைப்படையைச் சேர்ந்தவர் என்றும்,  தனது மனைவி வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்றதாக பொய்யாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தற்போது நசிரூதீன் கைது செய்யப்பட்டடுள்ளார். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.