தட்பவெப்ப நிலைக்கேற்ப இந்திய மயமாகும் புல்லட் ரெயில்

டில்லி

ந்தியாவில் உள்ள தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப புல்லட் ரெயில் மாறுதல் செய்யப்படுகின்றது.

ஜப்பான் நாட்டுக் கூட்டுறவுடன் அமைக்கப்படும் புல்லட் ரெயிலின் முதல் ரெயிலும் ஷிங்கான்சென் என ஜப்பான்  பெயரிட்டுள்ளது.   இதன் மூலம் மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் ரெயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.   இந்த ரெயில் வரும் 2023 ஆம் வருடம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே ஓட உள்ளது.   இத்தகைய ரெயில்கள் ஏற்கனவே ஜப்பான் நாட்டில் சேவையில் உள்ளன.அ

ஆனால் ஜப்பான் நாட்டில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாகவே காணப்படும்.  ஆனால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் ஒரு சில சமயங்களில் வெப்ப நிலை 50 டிகிரியைக் கூட தாண்டும் நிலை உள்ளது.  இதனால் இந்த புல்லட் ரெயில் அமைப்பை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இது குறித்து புல்லட் ரெயிலை அமைக்க உள்ள தேசிய அதிவேக ரெயில் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மா கவுர், “நமது நாட்டு சுற்றுச் சூழல் தன்மையை மனதில் கொண்டு ஏர் கண்டிஷன் விசிறிகள் மற்றும் முக்கிய பாகங்களில் காற்று வடிகட்டி  பொருத்தப்பட உள்ளது.   இந்த வடிகட்டி மூலம் மிகச் சிறிய அளவிலான தூசி கூட உட்புகாதபடி தடுக்கப்படும்.    உள்ளே தூசு என்பது சிறிதும் இருக்காது.

தற்போது மெட்ரோ ரெயிலில் ஏர்கண்டிஷன் இயந்திரங்கள் கூரைக்கு மேல் உள்ளன.  ஆனால் புல்லட் ரெயிலில் பெட்டிகளில் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும்.   அதி வேகத்தில் செல்வதால் காற்று அழுத்தம் மாறுபடும் என்பதால் விமானத்தைப் போல் பெட்டி முழுவதுமாக மூடப்பட்டு அழுத்தம் சீராக இருக்கும் படி செய்யப்படும். “ எனக் கூறி உள்ளார்.