மதுரை,

திமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக வின் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு அ.தி.மு.க பிளவுபட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்செந்துாரைச் சேர்ந்த ராம்குமார்  என்பவர், உடைந்த அதிமுகவில் எந்த அணிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அதற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட கோரி   உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து. அப்போது தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலை சின்னம் குறித்து இரு அணிகளின் மனுக்கள் மீதும்  முடிவெடுக்க எவ்வளவு காலமாகும் என தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு உத்தரவிட்டது.

‘இன்று தேர்தல் கமிஷனின் விளக்கத்தை தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.