வாட்ஸ்அப் புதிய கொள்கை யாருக்கு பொருந்தும் ? சர்ச்சையை தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

 

வணிக நோக்கோடு வாட்ஸ்அப்-பை பயன்படுத்துவோருக்கு மட்டுமே புதிய கொள்கை வாட்ஸ்அப் விளக்கம்

வாட்ஸ்அப் நிறுவனம் மேற்கொண்ட புதிய பயன்பாட்டு கொள்கை உலகெங்கிலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும், வாட்ஸ்அப்பை தடை செய்ய வேண்டும், மாற்று செயலியை பயன்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைக்கைகளும், இயக்கங்களும் வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ்அப் பயன்பாடு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்பட்டு வந்த நிலையில்.

தற்போது இதனை வணிக தகவல்கள் பெறுவதற்கும் வணிக நிறுவனங்கள் தஙகள் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்களை அனுப்பவும் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

அதனால் இந்த புதிய பயன்பாட்டு கொள்கையை அறிவித்திருக்கிறது என்று வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே, அக்டோபர் மாதம் நாங்கள் இதுகுறித்து விளக்கமாக கூறியுள்ளோம், பயனர்களுக்கு வணிக நிறுவனங்கள் குறித்தும், அதை அவர்கள் வாங்குவதற்கு வழிசெய்யும் வகையில் இந்த புதிய கொள்கை உதவும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் இதனை சாதாரண பயனர்கள் வணிக பயனர்கள் என்பதை எப்படி பிரித்து பார்பார்கள் என்றோ வணிக பயன்பாட்டுக்கு என்றுள்ள வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும் தான் இந்த கொள்கையா என்பது குறித்து சரியான விளக்கம் தரப்படவில்லை.

வாட்ஸ்அப் செயலியிக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியிருப்பதை தொடர்ந்தே அவர்கள் இந்த விளக்கத்தை மீண்டும் அளித்திருப்பதாக தெரிகிறது.