சென்னை

திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பிரசாரம் விறுவிறுப்பாகத் தொடங்கி உள்ளது.  தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் களம் இறங்கி உள்ளன.   அத்துடன் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி மற்றும் அதிமுகவுடன் பாஜக என தேசிய கட்சிகள் உள்ளன.

இதைத் தவிர கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, புதியதாக களம் இறங்கி உள்ள ரஜினிகாந்த் கட்சி எனப் புதுமுகங்களும் களத்தில் இறங்க உள்ளனர்.   தவிர மதிமுக, தேமுதிக, விசிக, நாம் தமிழர் என பல கட்சிகளும் களத்தில் இறங்கத் தயாராக உள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினின் முக நூல் கணக்கில் ஒரு புதிய பதிவு ஒன்று வெளியாகி உள்ளது.  அதில்,

“தலைவர் ஸ்டாலின் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட உள்ளார். 

காத்திருங்கள்,

20 டிசம்பர்2020

காலை 10 மணி”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.