இன்று 1044 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,05,004 ஆக உயர்வு

சென்னை: மாநிலதலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில்  1044 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரைகொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால்,  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை சென்னையில் கொரோனா பாதிப்பு  குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னையில் கொரோனா பரிசோதனையும் குறைக்கப்பட்டு உள்ளது கவனத்திற்குரியது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1044 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,05,004 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 997 பேர் கொரோனா சிகிச்சையில்  இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 90,966 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள னர்.

தற்போதைய நிலையில், 11,811 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 25 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,227 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.