மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் இன்று 10,483 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டு மொத்தம் 4,90,262 ஆனது.

 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

இங்கு இன்று 10,483 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,90,262 ஆகி உள்ளது.

இன்று 300 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 17,902 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 10,906 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3,27,281 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,45,582 பேர் சிகிச்சையில் உள்ளனர்.