இன்று 1074 பேர்: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

சென்னை:

மாநில தலைவர் சென்னையில் இன்று 1074 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டி உள்ளது.

bty

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று 5879 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,887 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 86,301 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,436 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி