விஜயவாடா

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 10,759 கர்நாடகாவில் 25,795 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 25,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 12,47,997 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 123 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,885 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,624 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,37,857 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,96,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 10,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,97,462 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 31 பேர் உயிர் இழந்து இதுவரை 7,541 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 3,992 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,22,977 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 69,944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.