ஆந்திராவில் இன்று 10820 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா

ந்திர மாநிலத்தில் இன்று 10820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 2,27,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி 10000 ஐ தாண்டி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 10,820 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 2,27,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 97 பேர் மரணம் அடைந்து மொத்தம் 2,036 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,097 பேர் குணம் அடைந்து மொத்தம், 1.38,712 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 87,112 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது அகில இந்திய அளவில் இரண்டாம் இடமாகும்.

கொரோனா பாதிப்பில் ஆந்திரா மூன்றாம் இடத்தில் உள்ளது.