மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 115 காவலர்களுக்கு கொரோனா…

மதுரை:

துரை மாவட்டத்தில்  இன்று மேலும் 115 காவலர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து,  பாதிக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கை  142 ஆக உயர்ந்துள்ளது.

மதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 2557 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 817 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 1708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 32 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று  மதுரை மாநகரில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட 115 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, காவல்துறையினரின் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.