இன்று 1157 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 82ஆயிரத்தை கடந்தது…

சென்னை:

மிழகத்தில் இன்று புதிதாக 4549  பேருக்கு தொற்று  உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,56,369 ஆக உயர்நதுள்ளது.

bty

சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை 65,748 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,o38  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது.