சென்னையில் இன்று 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

--

சென்னை

சென்னையில் இன்று 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 1,000க்கு மேல் காணப்படுகிறது.

இன்று 1164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 1,84,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 13 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3,441 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1217 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,67,284 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 13,704 பேர் சிகிச்சையில் உள்ளனர்.