சென்னையில் இன்று 1,243 பேர், மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரிப்பு…

சென்னை:

மிழகத்தை கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையை பொறுத்தவரை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

மிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,60,907  ஆக உயர்ந்துள்ள நிலையில்,  சென்னையில் இன்று ஒரே நாளில்  1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 83,377  ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 67,077 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 14,923  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,376  ஆக உயர்ந்துள்ளது.