இன்று 1,270 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,27,949ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது.

bty

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,27,949-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில், 1,136 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,11,955 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

தற்போதையை நிலையில் சென்னையில் மட்டும் 13,371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

.இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,623 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.