சென்னையில் இன்று 1272 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1200க்கு குறையாமல் உள்ளது.

இன்று ஒரே நாளில் 1272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 1,80,751 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 23 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 3,396 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,173 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,63,778 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 13,577 பேர் சிகிச்சையில் உள்ளனர்.