சென்னையில் இன்று புதியதாக 1286 பேருக்கு பாதிப்பு, 32 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 1லட்சத்து 30ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,156 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதன் காரணமாக மாநில தலைநகரில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  1,14,448 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில்,  13,450 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 32 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலியானோர் எண்ணிக்கை  2,666 ஆக உயர்நதுள்ளது.