சென்னையில் இன்று 1,296 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,31,869 ஆக உயர்வு…

சென்னை:  தமிழகத்தில் இன்று 5,996 பேர் புதிதாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும்  102 பேர் உயிரிழந்துள்ளனர்.

bty

அதிகபட்சமாக சென்னையில்  இன்று மட்டும் 1,296 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 1,31,869 -ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவில் இருந்து 1,15,649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை 2,690 பேர் உயிரிழந்துள்ளனர்.