இன்று 1329 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 93,537 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.

அதிகப்பட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 93,537 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 77,625 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,923 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.