இன்று உத்தரப்பிரதேசத்தில் 13,685 பேர், டில்லியில் 11,491 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13,685 பேர், மற்றும் டில்லியில் 11,491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

டில்லியில் இன்று 11,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 7,36,688 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 72 பேர் மரணம் அடைந்து இதுவரை 11,355 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 7,665 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,87,238 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 38,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 13,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,05,700 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 72 பேர் மரணம் அடைந்து இதுவரை 9,224 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 3,197 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,14,819 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 81,576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.