சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,33,585 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,29,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,084 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 203 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,23,986 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,790 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.