மகாராஷ்டிராவில் இன்று 16,476 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 16,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,00,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 14,00,922 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 394 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 37,056 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 167,104 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,04,426 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,59,006 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் மகாராஷ்டிரா  மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.