டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,41,291 ஆக உயர்ந்து 1,49,686 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 16,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,03,41,291 ஆகி உள்ளது.  நேற்று 215 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,49,686 ஆகி உள்ளது.  நேற்று 19,658 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 99,46,131 ஆகி உள்ளது.  தற்போது 2,42,579 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,282 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,42,136 ஆகி உள்ளது  நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,666 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,064 பேர் குணமடைந்து மொத்தம் 18,36,999 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 54,317 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 810 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,21,938 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,107 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 743 பேர் குணமடைந்து மொத்தம் 8,98,919 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 232 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,83,082 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,115 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 352 பேர் குணமடைந்து மொத்தம் 8,72,897 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,20,172 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,156 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,002 பேர் குணமடைந்து மொத்தம் 8,00,429 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,127  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,600 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,75,853 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,668 பேர் குணமடைந்து மொத்தம் 7,07,244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,277 பேர் சிகிச்சையில் உள்ளனர்.