Random image

சென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,34,740 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,30,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இதுவரை 4,085 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 225 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,24,417 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,693 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.