இன்று: பராசக்தி, ரத்தக்கண்ணீர் பட  இயக்குநர்(கள்) எவரென தெரியுமா?

 

கிருஷ்ணன் - பஞ்சு
கிருஷ்ணன் – பஞ்சு

இயக்குநர் ரா. கிருஷ்ணன் ( கிருஷ்ணன்-பஞ்சு ) நினைவு நாள்

 பராசக்தி என்றவுடன் சிவாஜியின் நடிப்பும், கருணாநதியின் வசனமும் நினைவுக்கு வரும். ரத்தக்கண்ணீர் என்றவுடன் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும்,  திருவாரூர் தங்கராசுவின் வசனமும் நினைவுக்கு வரும்.

இரு படங்களையும் இயக்கியவர்(கள்) கிருஷ்ணன் பஞ்சு என்று எத்தனை பேருக்குத் தெரியும்? சுமார் ஐம்பது படங்களுக்குமேல் இயக்கிய இரட்டையர்கள் இவர்கள்.

இவர்களில் கிருஷ்ணனின் நினைவு நாள் இன்று.

கதை-திரைக்கதையை சீராக அமைப்பதில் கிருஷ்ணனும், படப்பிடிப்பு-படத்தொகுப்பு பணிகளை சிறப்பாக கவனிப்பதில் பஞ்சுவும் வல்லுனர்கள்.

1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 வயதில் சென்னையில் காலமானார் பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காத ரா. கிருஷ்ணன், 1997  ஜூலை 17 அன்று தனது 87 வயதில் சென்னையில் காலமானார்.

 

 

You may have missed