விஜயவாடா

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11,766 கர்நாடகாவில் 26,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 26,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,50,502 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 190 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,075 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,697 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,46,554 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,14,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 11,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,09,228 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை 7,579 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 4,441 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,27,418 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 74,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.