இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 20,034 கர்நாடகாவில் 44,631 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 20,034 கர்நாடகாவில் 44,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 44,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,90,934 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 288 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,538 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 24,724 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,10,013 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,64,363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 20,034 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,84,028 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 82 பேர் உயிர் இழந்து இதுவரை 8,289 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 12,207 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,16,142 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 1,59,597 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.