விஜயவாடா

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 31,531பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 22,03,462 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 403 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 31,475 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 36,475 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,81,457 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,00,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 24,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,35,186 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 101 பேர் உயிர் இழந்து இதுவரை 9,372 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 21,101 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,15,683 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,10,436 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.