சென்னையில் 1000ஐ கடந்தது கொரோனா பலி: இன்று மேலும் 23 பேர் உயிரிழப்பு…

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையை கொரோனா சூறையாடி வருகிறது.  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சென்னையில் இதுவரை 64, 689 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை  40,111 பேர் கொரோனாவில் குணமடைந்துள்ளனர்.  23,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , இதுவரை 996 ஆக உயர்ந்து இருப்பதாகவும் நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், கடந்த 16 மணி நேரத்தில்  மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி,  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 9 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும்,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 23 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா  உயிரிழப்பு  1019 ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி