இன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் – ஜூலை 28

டில்லி

லக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஆண்டுதோறும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

தற்போது அனைத்து உலக நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் சுற்றுச் சூழல்  பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது.

இயற்கையை நாம் பாதுகாத்தால் மட்டுமே இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் வாழ்க்கைக்கு இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை இன்றியமையாத ஒன்று ஆகும்.

ஆகையால், இயற்கையின் இந்த வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் இயற்கை  வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.