கொரோனா : இன்று கேரளாவில் 28,447, உத்தரப்பிரதேசத்தில் 36,605 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்

ன்று உத்தரப்பிரதேசத்தில் 36,605. மற்றும் கேரளா மாநிலத்தில் 28,447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 28,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,50,502 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,056 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,663 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,66,135 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,78,979 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 36,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,51,487 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 196 பேர் உயிர் இழந்து இதுவரை 10,737 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 22,566 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,28,980 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,73,653 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.