இன்று 2வது ஒருநாள் போட்டி – தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில், 19 ரன்கள் வித்தியாசத்தில், சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இந்நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இதிலும் வெல்லும் பட்சத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றலாம் ஆஸ்திரேலியா.

டி-20 தொடரை மயிரிழையிலேயே நழுவவிட்டது ஆஸ்திரேலியா. எனவே, அதற்கு பழிதீர்க்கும் வகையில், ஒருநாள் தொடரை வெல்லும் கட்டாயத்தில் உள்ளது அந்த அணி.

ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸம்பா & ஹேசில்வுட் போன்றோர், கடந்தப் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.