கர்நாடகாவில் இன்று 3,130 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் இன்று 3,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,05,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 8,05,947 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 42 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 10,947 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,715 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 7,19,548 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 75,423 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.