கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 3,579 பேர், டில்லியில் 340 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

ன்று மகாராஷ்டிராவில் 3,579 பேர், மற்றும் டில்லியில் 340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,81,623 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இன்று 70 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 50,291 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,309 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,77,588 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,558 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,31,589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,722 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 390 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,17,930 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 2,937 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.