இன்று 3,680 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1லட்சத்து 30ஆயிரத்தை தாண்டியது..

சென்னை:

மிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை   1லட்சத்து 30ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு சென்னையை விட மாவட்டங்களில் அதிகர்த்த வருகிறது. இன்று ஒரே நாளில் 3680 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு   1,30,261 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 35,921 பேருக்கு கொரோனாவுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 14,64,281 பேருக்குகொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 82,324 பேர் மீண்டுள்ளனர்.

இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 63.2 % பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,829-ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 46,105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 1,205 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி