திருவனந்தபுரம்

ன்று உத்தரப்பிரதேசத்தில் 18,662. மற்றும் கேரளா மாநிலத்தில் 37,190 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 37,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,01,980 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,508 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 26,148 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,39,257 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,56,868 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 18,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,61,075 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 319 பேர் உயிர் இழந்து இதுவரை 13,766 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 32,220 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,75,354 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,71,995 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோன பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.