காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றில் காஞ்சிபுரம் மாவட்டமும் அதிக அளவில் பாதிப்பு அடைந்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இதில்

காஞ்சிபுரம் தொகுதி: 210
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி: 45
உத்திரமேரூர்: 12
வாலாஜாபத்: 36
குன்றத்தூர்: 8
பரணிபுத்தூர்: 2
சிறுகளத்தூர்: 1
ஐயப்பன்தாங்கல்: 5
திருமுடிவாக்கம்: 2
மங்காடு: 10
ஆதனஞ்சேரி: 11
கெருகம்பாக்கம்: 5
கொலப்பாக்கம்: 3
மவுலிவாக்கம்: 5
ஒரகடம்: 7
சிக்கராயபுரம்: 3
கோவூர்: 1
படப்பை: 1

எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் அதிக அளவில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ம்  இதையொட்டி  மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ”பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள 15, 16 ,17, 18 ,19 உள்ளிட்ட 5 வார்டுகளில் உள்ள 21 தெருக்கள் 12ந்தேதி நள்ளிரவு முதல் 26ந்தேதி நள்ளிரவு வரை 14 நாட்கள் முழுமையாக அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். அப்பகுதி மக்களுக்குத் தேவையான காய்கறிகளை நகராட்சி மூலம் வீடு வீடாகச் சென்று அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி