இன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா…

சென்னை:

மிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு மக்களிடையே பதற்றத்தை எற்படுத்தி வருகிறது. இன்று 7 வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டுள்ள 3,882  பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 2182. சென்னையில் 3 வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு- 60,533ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் நோய் தொற்றில் இருந்து  2,852 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50,074ல் இருந்து 52,926 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 56.27 % குணமடைந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக  63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,264 ஆக உயர்ந்திருக்கின்றது.

தமிழகத்தில் தற்போது வரை 39,856  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில், வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மஸ்கட், சவுதி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 16 பேரும்,  கர்நாடகாவிலிருந்து வந்த 18 பேரும்,  கேரளாவிலிருந்து வந்த 11 பேருக்கு கொரோனா  உறுதியாகி உள்ளது.

இன்று ஒரே நாளில் 31,521 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இதுவரை 11,47,193 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி