கொரோனா : இன்று கேரளாவில் 4,353, ஆந்திராவில் 2,558 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 4,353,  மற்றும் ஆந்திராவில் 2,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 4,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,48,948 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,729 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,206 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,10,283 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,619 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,15,832 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 6 பேர் உயிர் இழந்து இதுவரை 7,268 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 916 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,93,651 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 14,913 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.