மும்பை

ன்று ஆந்திராவில் 2,765. மற்றும் கேரளா மாநிலத்தில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,54,011 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 22 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,751 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,475 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,12,758 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 36,185 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,18,597 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை 7,279 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 1,245 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,94,896 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 16,422 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.