இன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று மட்டும்  சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 6,501 பேர்.இதனால்  குணமானவர்கள் எண்ணிக்கை :2,08,784  ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமானவர்கள் 77.80%

இன்று  ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 1023 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 55,152

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 5063 பேரில், 5035 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்,  26 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட உள்ளது.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த 26 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று ஒரே நாளில் 55,122 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை 27,86,250 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3041 பேர் ஆண்கள், 2022 பேர் பெண்கள்.

தமிழகத்தில் 125 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

கார்ட்டூன் கேலரி