இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை:

மிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் வெளியாகி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில்,  இன்று மட்டும் தமிழகத்தில் 54 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர் எண்ணிக்கை  752 ஆக உயர்ந்துள்ளது. இது 44,68 சதவிகிதம்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை: 908 பேர்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை சோதனை நடத்தப்பட்டுளவர்கள்  எண்ணிக்கை: 59,952